Questions for Ramanusar1000 Book


To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie

ஸ்ரீ:
    மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப்  10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள்.
    சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு  உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு விடைகளை அளிக்க முற்படுங்கள்.    

இராமாநுசர் ஆயிரம் – முதல் பாகம் – கேள்வித்தாள்

1. பரமபதநாதன் யாருக்கு என்ன கட்டளை இட்டார் அதன் பிறகு என்ன நடந்தது?                – 05
2. யாதவ பிரகாசன் என்பான் யார்? அவன் சொன்ன அவப் பொருள் யாது?                    – 05
3. ஆளவந்தார் அருளிச்செய்த க்ரந்தங்களின் எண்ணிக் கையை குறிப்பிடுக? அவர் அருளிச் செய்த க்ரந்தங்களில் மூன்றைக் குறிப்பிடுக?                – 05
4. “இந்த சரீரம் த்ருடமாய் ஆளவந்தாருடைய திருவருளும் அடியேனிடத்தில் பரிபூர்ணமாய் எம்பெருமானும் அடியேன் நினைத்தபடியே தலைக்கட்டினால் ஆளவந்தாரின் மூன்று குறைகளையும் தீர்க்கக்கடவேன்” இந்தச் சூளுரையை யார் எங்கே செய்தார். அதை எவ்வாறு அந்தச் சூளுரையைத் தலைகட்டினார்? (இருபது வரிகளுக்கு மேற்படாமல் விடை அளிக்கவும்)                        – 15
5. கோவிந்தஜீயரின் பூர்வாச்சரம பெயர் யாது. அவர் துறவறம் பூண்ட பிறகு எழுதிய நூலின் பெயர் என்ன?    – 05    
6. உடையவர் பெரிய பெருமாளுக்கு ‘குடிநீர்’ ஸமர்ப்பித் திடுவதற்கான ஏற்பாட்டை யாரைக்கொண்டு செய்தார்? அவ்வாறு செய்வதற்கான காரணம் யாது?        – 05
7. இராமாநுசருக்கு, ‘எம்பெருமானார்’ என்ற திருநாமத்தை யார் எங்கே சாற்றி மகிழ்ந்தார் அதன் பின்னணியை இருபது வரிகளில் விவரித்திடுக.                – 15
8. இராமாநுசருடைய திருமுடி ஸம்பந்தத்தால் அவருக்கு முன் தோன்றிய ஆசார்யர்களும், அவருடைய திருவடி ஸம்பந்த த்தால் அவருக்குப் பின் தோன்றிய ஆசார்யர்களும் உய்வு பெற்றனர் என்பதை எவ்வாறு நம் பூர்வாசார்யர்கள் நிலைநாட்டி உள்ளனர் என்பதை இருபது வரிக்குள் விவரித்திடுக.    – 10
9. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளில் யார் யாரை ஆச்ரயிக்கச் செய்தார். அப்போது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சொன்ன வார்த்தை யாது?        – 05
10. திருவிருத்தம் 9வது பாட்டில் ஒரு ஐதிஹ்யம் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன் பின்னணியை இருபது வரிகளில் விவரித்திடுக.                 -10
11. ‘அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்’ என்ற இந்த தனியனை யார் யாரிடம் எங்கே கூறினார்?    – 05
12. ‘ஞானப்பள்ளப்பெண்’ கூறிய மறுமொழி யாது? இது எங்கே நிகழ்ந்தது?                    – 05
13. கோவிந்தப்பெருமாள் எம்பார் ஆன வைபவத்தை இருபது வரிகளில் விவரித்திடுக.                – 10
14. திருமாலிருஞ்சோலை பரமஸ்வாமியின் பெருமைகளை ஆழ்வார்கள் அருளிச்செயல் கொண்டு முப்பது வரிகளில் விவரித்திடுக.                        – 15
15. ‘இடமணித்து’ என்னும் அகத்துறை இலக்கியத்திற்கு உட்பட்ட பாடலைக் குறிப்பிடுக அதற்கான விளக்கத்தைத் தந்திடுக.                        – 05
16. “கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” இந்தத் திருவாய்மொழி பாசுரச் சொற்றொடர் யாரால், எங்கே யாரிடம் சொல்லி விளக்கம் அளிக்கப்பட்டது?                     – 05
17. ‘போதாயன வ்ருத்திக்ரந்தத்தை’,  உடையவர் காண முடிந்ததா, அப்போது கூரத்தாழ்வான் கூறிய வார்த்தைகளை விவரித்திடுக.                        – 05
18. பிரமாணத்தின் லக்ஷணங்கள் யாவை?        – 05
19. திருப்பாவை பன்னிரண்டு மற்றும் பதினெட்டாம் பாசுரங்களுக்கு அமைந்துள்ள ஏற்றங்கள் பற்றி பத்து வரிகளில் விவரித்திடுக.                        – 05
20. ‘நம்குடி’ என்னாதே ‘தன்குடி’ என்று பெரிய திருமொழி 2-7-6ஆம் பாசுர உரையில் பெரியவாச்சான் பிள்ளை வெளிப்படுத்திடும் விளக்கத்தை விவரித்திடுக.    – 05
21. வங்கிபுரத்து நம்பியைக் கண்டு இராமாநுசர் அஞ்சிடக் காரணம் என்ன?                    – 05
22. திருவரங்கத்தில் சுப்பிரமணிய பட்டர் எழுப்பிய வினா என்ன? அதற்கு உடையவர் அளித்த மறுமொழி யாது?                             – 05
23. ‘தேவையிடாதவர்’ யார்? இராமாநுசர் அந்தத் தேவையிடாதவர் எழுந்தருளிய போது அருளிச் செய்த விளக்கம் யாது?                    – 05
24. இராமாநுசரை ஓர் ஏரியாக உருவகம் செய்தவர் யார்? அந்த ச்லோகத்தை அடிபிறழாமல் எழுதுக?            – 05
25. ‘பிரபத்தி அது எப்படி இருக்கும்’, இராமாநுசரின் இந்தக் கேள்விக்கு யார் யார் விளக்கம் அளித்தனர்?        – 15
26. இராமாநுசரைப் பெரியநம்பி எங்கே எப்போது தண்டனிட்டார்? அதற்கு இராமாநுசர் அளித்த விளக்கம் யாது?                             – 05
27. ‘இன்றியமையாமை’ என்ற அகஇலக்கியக் கோட்பாட்டை மேற்கோள் காட்டி இராமாநுசர் அளித்த விளக்கத்தை விவரித்திடுக.                        – 05
28. ‘ஸாமாநாதிகரண்யம்’ என்றால் என்ன பொருள்? அதன் அடிப்படையில் மூன்று திருவாய்மொழி பாசுரங்களுக்கு 30 வரிகளுக்கு மேற்படாமல் விளக்கம் அளித்திடுக.    – 15
29. கிடாம்பியாச்சானுக்கு அருளப் பாடிட்டு திருமாலிருஞ் சோலை மாயன் அருளிச்செய்த வார்த்தை யாது?    – 05
30. திருவரங்கத்தில் இராமாநுசர் முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகளில் ஏதேனும் இரண்டு வார்த்தை களின் பொருளை விவரித்திடுக.            – 10
31. ‘ராமாநுஜ ஸ்பர்ச வேதி’ என்ற சிறப்பினைப் பெற்றவர் யார்? அதன் பின்புலத்தை பத்து வரிகளில் விவரித்திடுக.                     – 05
32. சோமாஸியாண்டானுக்கே அமைந்துள்ள ஏற்றம் யாது?, அவர் இராமாநுசரின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இயற்றிய நூலின் பெயர் என்ன?        – 05
33. அனந்தாழ்வான் வைபவத்தை இருபது வரிகளில் விவரித்திடுக.                        – 10
34. வடுகநம்பிக்கே அமைந்துள்ள ஏற்றம் யாது? இருபது வரிகளில் விவரித்திடுக.                – 10
35. “அதுநமதுவிதிவகையே” திருவாய்மொழி 10-6-1 பாசுர விளக்கத்தின் போது நடந்த நிகழ்ச்சியினை இருபது வரிகளில் விவரித்திடுக.                        – 15
36. இராமாநுசரின் மருத்துவஇயல், வேளாண்இயல் பற்றிய சிந்தனைகளை இருபது வரிகளில் தொகுத்து தந்திடுக.- 10
37. “பூர்ணாய பூர்ண கருணா பாத்ராய அமிததேஜஸே மாலாதர ப்ரியாயாஸ்து யதிராஜாய மங்களம்” இந்த ச்லோகத்திற்கான பொருள் யாது?            – 05
38. “திருப்பாவைக்கு யார் பொருள் சொல்ல வேண்டும்? யார் கேட்க வேண்டும்” என்ற கேள்விக்கு இராமாநுசர் அளித்த பதில் யாது?                        – 05
39. திரிபுராதேவியார், ‘நீங்கள் ஏன் சிவனை வழிபடுவது இல்லை’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் அளித்தார்?                        – 05
40. “துடுப்பிருக்க கை வெந்து போகலாமோ” இடம் சுட்டி பொருள் விளக்குக?                    – 05
41. ஒவ்வொரு நாள் இரவும் இராமாநுசர் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமிடும் என்று ராமாநுஜார்ய திவ்ய சரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கான காரணம் யாது?    – 05
42. “தத்யதா இஷீகதூலம் அக்நௌப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய ஸர்வேபாப்மாந: ப்ரதூயந்தே” இந்த வாக்கியம் எந்த உபநிஷத்தில் அமைந்துள்ளது?, இதன் பொருளை வெளிப்படுத்தும் திருப்பாவை பாசுரத்தைக் குறிப்பிடுக?                        – 05
43. “செஞ்சொற்கவிகாள் உயிர்காத்து ஆட்செய்மின்” என்ற திருவாய்மொழி 10-7-1 சொற்றொடர்க்கு இராமாநுசர் தந்த விளக்கத்தினை விவரித்திடுக.                – 05
44. சரணாகதி பற்றி பிள்ளை உறங்காவில்லி தாஸர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு உடையவர் தந்த விடையையும் இருபது வரிகளில் விவரித்திடுக.            – 10
45. இடம் சுட்டிப் பொருள் வரைக.            – 15
(ச்) ராமாநுஜமுநிர் ஜீயாத் யோ ஹநேர் ப4க்தியந்த்ரத: ந
    கலிகோலாஹலக்ரீட3õ முத4õக்3ரஹமபாஹரத் நந
(ஞ) யதிபரிப்3ருடே4õ யத்3கீ3தாநாம் அத3ர்†யத3ஞ்ஜஸா
    நிக3மபரிஷந்நேதீ3யாம்ஸம் ஸுத4õமயமா†யம்  ந
    ஜநநபத3வீயாதாயாதƒரமாபஹராம் தி4யம்
    ஜநயது ஸ மே தே3வ: ஸ்ரீமாந் த4நஞ்ஜய ஸாரதி2: நந
(ஞி) லக்ஷ்மீபதேர் யதிபதேƒச த3யைகத4õம்நோ:
    யொ(அ)ஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜக3த்3தி4தார்த்த2ம் ந
    ப்ராச்யம் ப்ரகா†யது வ: பரமம் ரஹஸ்யம்
    ஸம்வாத3 ஏஷ †ரணாக3திமந்த்ரஸார: நந
46. ‘திருமலைஒழுகு’ வழி திருமலையில் இராமாநுசர் மேற்கொண்ட சீர் திருத்தங்களை 30 வரிகளுக்கு மேற்படாமல் தந்திடுக.                        – 20
47. திருவரங்கத்தில் உடையவர் ஆண்டு திருநக்ஷத்திர உத்ஸவத்தில் நடைபெறும் பொலியன் சிறப்பினை இருபது வரிகளில் விவரித்திடுக.                – 20
48. திருவரங்கத்தில் ஒவ்வொரு ஸப்தாவரணத்தன்றும் நம்பெருமாள் உடையவர் ஸந்நிதிக்கு எழுந்தருளுவது ஏன்?, அப்போது நடைபெறும் வைபவத்தை 10 வரிகளில் விவரித்திடுக.                        – 05
49. ஆழ்வான் தாம் அருளிச் செய்த நூல்களில் எம்பெருமானாரை பல்வகையிலும் கொண்டாடி உள்ளார் அவற்றைத் தொகுத்துத் தருக.            – 10
50. ‘ஐம்பத்திருவர்’ என்று எந்த திவ்யதேசத்து கைங்கர்ய பரர்களுக்கு பெயர் அமைந்துள்ளது அவர்களைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை இருபது வரிகளுக்கு மேற்படாமல் விவரித்திடுக.                         – 10
முதல் பாகம் கேள்வித்தாள் முற்றும்.
***
இராமாநுசர் ஆயிரம் – இரண்டாம் பாகம் – கேள்வித்தாள்
1.    விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம்
    அங்கீ3குருஷ்வ யதிராஜ த3யாம்பு3ரா÷† ந
    அஜ்ஞோண்யம் ஆத்ம கு3ணலே† விவர்ஜிதƒச
    தஸ்மாத் அநந்ய †ரணோ ப4வதீதி மத்வா    ந ந  
    இந்த ச்லோகம் எந்தத் துதி நூலில் அமைந்துள்ளது இதை அருளிச்செய்தவர் யார் அந்த நூலின் திரண்ட பொருளை இருபது வரிகளில் விவரித்திடுக.                     – 20
    2. ‘இராமாநுச நூற்றந்தாதிக்கு’ அமைந்துள்ள ஏற்றம் யாது? இருபது வரிகளில் விவரித்திடுக.                – 10
3. ‘யதிராஜ ஸப்ததி’ 31 வது ச்லோகத்தின் பொருளைக் விவரித்திடுக.                        – 05
4. ஆந்திர பூர்ணர் என்று கொண்டாடப்படுபவர் யார்?, அவர் அருளிச்செய்த துதி நூலின் பெயர் என்ன? இவரைப்பற்றிய குறிப்பு ஸ்ரீவசனபூஷணம் எத்தனையாவது நூற்பாவில் காணப்படுகிறது?                    – 05
5. தத்3 ப4 õஷ்யமாத3 õய நித4 õய முர்த்4 நி
   ஸ்ரீப4 õஷ்யமேதத்3 வரப4 õ ஷ்யக்ருத் த்வம் ந
   இதீவ தஸ்மை ப்ரத3 தெ3ள ச தே3வீ
   ப4 õஷ்யம் ஹயக்3 ரீவமபி ஸ்வதே3 வம் நந    
இந்த ச்லோகம் எந்தத் துதிநூலில் அமைந்துள்ளது அதன் பொருள் யாது?                    – 05
6. ‘எதிராசரந்தாதி’ என்ற நூலை இயற்றியவர் யார்?, அதில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?        – 05
7. ‘யாதவாத்ரிச்ருங்கே’ என்ற விளி யாரைக் குறிக்கும்? அந்தச் சொற்றொடர் எந்த நூலில் அமைந்துள்ளது அந்த நூலை இயற்றியவர் யார்? அதன் பெயர் என்ன?        – 05    
8. ஸ்ரீபாஷ்ய மாலிகிதும் ஆக்த விசாலலேக்யா:
    ஸ்ரீவத்ஸசிஹ்ந குருரானத திவ்யகாத்ர:ந
   வேதாந்த ஸூத்ரமபி வக்தும் அமுஷ்ய ஸர்வம்
   உத்திஷ்ட லக்ஷ்மணமுநே தவ ஸுப்ரபாதம்நந
    இந்த ச்லோகம் எந்தத் துதிநூலில் அமைந்துள்ளது இதன் பொருள் என்ன?                    – 05
9. புரா ஸூத்ரைர் வ்யாஸ: ƒருதி †த ‡ரோர்த்த2ம் க்3ரதி2தவாந்
   விவவ்ரே தம் ƒராவ்யம் வகுளத4ரதாம் ஏத்ய ஸ புந: ந
    உப4õவேதௌ க்3ரந்தெ2ள க4டயிதுமலம் யுக்திபி4ரஸௌ
   புநர் ஜஜ்ஜேராமாவரஜ இதி ஸ ப்3ரஹ்மமுகுர: நந        
    இந்த முக்தக ச்லோகம் யாரால் இயற்றப்பட்டது, பொருள் என்ன?                    – 05
10. ‘தத்வத்ரயத்தில்’ பிள்ளைலோகாசார்யர் 34வது நூற்பாவில் ப்ரஹ்மஸூத்ரம் ஒன்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அந்த ஸூத்ரத்தின் பொருளை ‘வேதாந்தஸாரம்’ கொண்டு விவரித்திடுக?                        – 05
11. ‘தத்வத்ரய’ நூற்பா 133இல் ‘ஆகாசேசாவிசேஷாத்’ என்ற ப்ரஹ்ம ஸூத்ரத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அந்த ஸூத்ரத்தின் பொருளை ‘வேதாந்தஸாரம்’ கொண்டு விவரித்திடுக?                        – 05
12. ‘ஆசார்ய ஹ்ருதயத்தில்’ கிளி பூவை குயில் மயில் என்று குறிப்பிடப்படுவோர் யாவர்?                – 05
13. ‘ஆசார்யபதமென்று தனியே ஒரு பதம்; அதுள்ளது எம்பெருமானாருக்கே யாய்த்து” இவ்வாறு அறுதியிட்டது யார்?                                – 05
14. “கோயிலும் ப4õஷ்யகாரரு மிருக்க இங்கே †ரீராவஸான மாவதே” என்று பெறுக்க, “ஒரு ப4õக3வதனுடைய மடியிற் காட்டில் கோயில் உத்க்ருஷ்ட மன்று” என்று அருளிச் செய்தார். இந்தச் சொற்றொடர்கள் எந்த நூலில் காணப் படுகின்றன இதை யார் யாரிடம் எங்கே சொன்னார்?            – 05
15. சரணாகதி சாஸ்திரத்தைப் பற்றி பாஷ்யகாரர் தம்முடைய வேதாந்த விசார நூல்களில் குறிப்பிடாமல், கத்யத்திரயத்தில் குறிப்பிட்டதற்கான காரணங்களைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எங்கே குறிப்பிட்டுள்ளார்? நீங்கள் அறிந்தவாறு அதனை பத்து வரிகளுக்குள் விவரித்திடுக.                          – 10
16. ‘சதுச்லோகி’ என்ற க்ரந்தத்தை யார் அருளிச் செய்தார் அதற்கு அமைந்துள்ள விவரணங்கள் யாவை?    – 05
17. ‘குருபரம்பராஸாரம்’ என்ற க்ரந்தத்தை அருளிச் செய்தவர் யார்?. அதன் இறுதியில் அமைந்துள்ள பாடலைப் அடிபிறழாமல் எழுதுக.                – 05
18. ஸ்ரீமத் ரஹஸ்த்ரயஸாரத்தின் எந்த அதிகாரத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளுவதற்கு முன்பு அருளிச்செய்த வார்த்தைகளை ஸ்ரீதேசிகன் குறிப்பிடுகிறார் அந்த வார்த்தைகளை விவரித்திடுக?            – 10
19. பாகவத அபசாரம் பல்வகைப்பட்டிருக்கும். எம்பெருமானார் தம்முடைய அந்திமதசையில் அவற்றை வரிசைப்படுத்துள்ளார். அவற்றில் நான்கினை நீங்கள் குறிப்பிட்டு அவற்றை தவிர்ப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை, உள்ளது  உள்ளபடி இருபது வரிகளுக்கு மேற்படாமல் எழுதவும்.                – 15
20. இடம் சுட்டிப் பொருள் தருக.            – 10
(அ ) ஸமஸ்த சிதவித்வஸ்து சரீராயாகிலாத்மநே ஐ
    ஸ்ரீமதே நிர்மலா நந்தோதந்வதே விஷ்ணவே நம: ஐஐ
(ஆ)   ப்ரக்ருஷ்ட கு3ணபூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்4ரி ஸேவி நாம்ஐ
    ப்ரபந்ந ஸார்த்த2 வாஹாய யதிராஜாய மங்க3ளம் ஐஐ
21. ஸ்ரீராமானுஜ வைபவம் என்ற நூலை எழுதியவர் யார்?, அந்த நூலில் எத்தனை தலைப்புகளில் அமைந்துள்ளன.     – 05
22. ‘யதிராஜ விஜயம்’ என்ற நூலில் எத்தனை அங்கங்கள் அமைந்துள்ளன? இந்த நாடகத்தின் கதாநாயகன் பெயர் என்ன? இந்த நாடகத்தில் வரும் ரங்கப்பிரியன், ப்ரியரங்கன் ஆகிய கதாபாத்திரங்கள் யாரைக் குறிப்பிடுகின்றனர். இந்த நாடகத்தை இயற்றியவர் யார்?            – 05
23. ஸம்ஸ்கிருத நூலான ‘திவ்யஸூரிசரிதத்தில்’ இராமானுசர் வைபவம் எத்தனை ஸர்க்கங்களில் பேசப்படுகிறது. அந்த நூலில் காஞ்சீபுரத்தில் இராமாநுசர் பாடம்படித்துக் கொண்டிருந்த போது ப்ரம்மரக்ஷஸ் யாரைப் பீடித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்?                    – 05
24. ‘ப்ரபந்நாம்ருதம்’ என்ற நூலை இயற்றியவர் யார்? அதில் எத்தனை அத்தியாயங்களில் இராமாநுசர் வைபவம் பேசப்படுகிறது?                    – 05
25. ‘இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ என்று எச்சான், தொண்டனூர் நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் உடையவரிடம் கேட்ட விளக்கத்திற்குக் கிடைத்த பதில் என்ன என்பதை 20 வரிகளக்கு மிகாமல் விவரித்திடுக? இந்த நிகழ்ச்சி எந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது?            – 15    
26. ஓர் இரவு திருவீதியிலே சென்று கொண்டிருக்கும்போது பட்டருக்கு எம்பார் சொன்ன வார்த்தைகளைத் தொகுத்துக் கூறுக.                            – 05
27. ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற தமிழ் நூலை இயற்றியவர் யார்? அதில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?    – 05
28. பகவானும் ஆசார்யத்வத்தை ஏறிட்டுக்கொள்வதற்கான காரணங்களை அவன் திருவாக்கலே கூறியதாக ஸ்ரீபாஞ்சராத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதன் தொகுப்பை 20 வரிகளுக்கு மேற்படாமல் விவரித்திடுக?        – 15
29. “ஸ்ரீராமாநுஜரின் திருவடியிணைகளின் ஸம்பந்தம் பெற்றிருக்கையால், ஸ்ரீரங்கநாதனாகிற திருமகள் கேள்வன் என்னை ஆதரித்துப் பெரும் பேறுகளை வழங்கினானன்றோ: ஸ்ரீரங்கநாதனின் தேவியான ஸ்ரீரங்கநாயகி, அதைக்கண்டு “இவன் ஸ்ரீராமாநுஜரின் திருவடி ஸம்பந்தம் பெற்றவன்” என்று என்னிடம் தன் கருணையைப் பெருகவிட்டா ளன்றோ” என்று யார் அருளிச் செய்துள்ளார்? அதன் பொருளை 10 வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக?                         – 10
30. “ய: ஸ்ரீலக்ஷ்மணயோகி3வர்யசரணத்3வந்த்3வா ƒரயீ  நாப4வத்
           தஸ்யாத்யந்தத3யாதி3ஸத்3கு3ணநிதி4ர்நாராயண: ஸ்ரீபதி: ந
           த3õதும் முக்திமநாத3ரோ ப4வப்3ருஹத்3வரா†யே ஸந்ததம்
           நிக்ஷிப்யைவ ஹ்ருத4õபி நோ க3ணயதி ப்ராக்ஸித்3த4 கர்மேரித: நந
    இந்த ச்லோகத்தின் திரண்ட பொருள் என்ன? இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவர் யார்?        – 05
31.“அஸ்மிந்நர்த்தே2ஹி விƒவாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி ந
         மத்கடாக்ஷோ ப4வேத்3யஸ்மிந் மய்யேவ ப்ரவணோ ஹி ய: நந
         தஸ்ய தஸ்ய ஹ்ருதி3ஸ்தே3õயம் ப4விஷ்யதி ந ஸம்†ய:நந”
    என்ற ஸ்ரீபாஞ்சராத்ர ச்லோகத்தின் பொருள் என்ன?    – 05    
32. ‘யதீந்த்ரப்ரவணப்ரபாவம்’ என்ற நூலை இயற்றியவர் யார்? இவர் அருளிச் செய்த மற்ற ஐந்து நூல்களைக் குறிப்பிடுக?                        – 05
33.“யஸ் ஸ்வாபகாலே கருணாகரஸ்ஸந்
      பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் ந
      ஸந்தர்சயா மாஸ மஹாநுபாவம்
      தம் காரிஸூநும் சரணம் ப்ரபத்யே நந
    இந்த ச்லோகத்தை யார் யாரிடம் எங்கே விண்ணப்பம் செய்தார்? இதற்கான பொருள் யாது?            – 05
34. அழகியமணவாளப்பெருமாள் நாயனாருக்கு திருவாய் மொழிப்பிள்ளை இட்ட இறுதி ஆணையை விவரித்திடுக?    – 10
35. இந்த உடம்போடு இனியிருக்கப் போகாதுதான்
    செங்கமலத்தாள்கள் தன்னைத் தந்தருள் நீ-அந்தோ
    மையார் கருங்கண்ணி மணவாளா! தென்னரங்கா!
    வையாமல் இருப்பாயே இங்கு.
    இந்தப் பாடல் எந்த நூலில் அமைந்துள்ளது? யார் அருளிச்செய்தது?                    – 05    
36. திருமழிசை அண்ணா அப்பங்கார் தம்முடைய ‘பழநடைவிளக்கம்’ என்னும் நூலில் எம்பெருமானார் காலத்தில் இருந்த சாத்தாத முதலிகளை வரிசைப் படுத்தியுள்ளார்? அவர்களின் திருநாமங்களைத் தொகுத்துக் கூறிடுக?             – 05
37. ‘கிருமிகண்டசோழன்’ யார் என்பதைப் பற்றிய  கருத்தை முப்பது வரிகளில் பிராமணங்களின் அடிப்படையில் விவரித்திடுக?                         – 15
38. இராமானுசரின் சமுதாயச் சிந்தனைகளை நீங்கள் அறிந்த வகையில் முப்பது வரிகளுக்கு மேற்படாமல் தந்திடுக?- 15
39. திருவரங்கம் பெரிய கோயிலில் இராமாநுசர் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் ஐந்தினை விவரித்திடுக.        – 15
40. எம்பெருமானார் என்ற திருநாமம் ஸ்ரீரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகள் ஒன்றில் காணப்படுகின்றது. அந்த கல்வெட்டு எண் என்ன?            – 05
41. திருவரங்கத்தில் உடையவர் ஏற்படுத்தி வைத்த அருளிச்செயல் ஸேவாக்ரமத்தை இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.            – 15
42. ராமாநுஜாங்க்ரி †ரணோஸ்மி குலப்ரதீப:
     த்வாஸீத் ஸ யாமுநமுநேஸ் ஸ ச நாதவம்ச்ய: ஐ
     வம்ச்ய: பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா:
     தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ஐஐ
    இந்த ச்லோகத்தை யார் யாரிடம் எங்கே விண்ணப் பித்தார்?                        – 05
43. இராமப்பிரியர் செல்வப்பிள்ளையானது எவ்வாறு? இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.        – 15
44. நியமனப்படியில் முதல் கொத்தான அர்ச்சகர்களின் பணி எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.            – 15
45. திருப்பாவைக்கும் இராமாநுசருக்கும் இடையே அமைந்துள்ள தொடர்பினை இருபது வரிகளுக்கு மிகைப் படாமல் விவரித்திடுக.                – 15
46. “இன்றோ எதிராசர் இவ்வுலகில் தோன்றியநாள்
இன்றோ கலியிருள் நீங்கும்நாள்?”            
இந்தப் பாடல் வரிகளை யார் அருளிசெய்தார். இதன் பின் இரண்டு வரிகளைப் யார் பூர்த்தி செய்தார். இந்த நிகழ்ச்சி எங்கே எப்போது நடந்தது?                    – 05        47. இதுவோ பெரும்பூதூர். இங்கே பிறந்தோ
     எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார்? – இதுவோதான்
     தேங்கு பொருநல் திருநகரிக்கு ஒப்பான
     ஓங்கு புகழுடைய ஊர்?
இந்தப் பாடலை யார் எங்கே அருளிச் செய்தார்.    – 05
48. வாக்யத்வயம், ஸ்ரீசடகோபத்வயம், ஸ்ரீராமாநுஜ த்வயம், பாத்த்வயம் ஆகிய நான்கில் எந்தத்வயம் உயர்ந்தது. அந்த த்வயங்களை எழுதிடுக.                – 05
49. திருக்கோட்டியூர் நம்பி திருவடிகளில் இராமாநுசர் கேட்டது திருமந்த்ரத்தின் பொருளையா அல்லது சரமச்லோகத்தின் பொருளையா? ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருவுள்ளக் கருத்து யாது?                        – 05
50. ‘யதிராஜவிம்சதி’ என்ற நூல் எந்த ஊரில் இயற்றப்பட்டது. அப்போது பாகவதோத்தமர்கள் கொண்டாடியது ஒரு பாடலாக உருவெடுத்தது அதனை அடிபிறழாமல் எழுதுக?     – 10
இரண்டாம் பாகம் கேள்வித்தாள் முற்றும்.
***
இராமாநுசர் ஆயிரம் – மூன்றாம்  பாகம் – கேள்வித்தாள்
1. பராசரரும் பாராசர்யரும் ஒரே வ்யக்தியா அல்லது வெவ்வேறு வ்யக்திகளா?                 – 3            
2. உபநிஷத்துக்களாகிற திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது யார்?                – 3
3. ஸ்ரீபாஷ்யம் என்றால் என்ன பொருள்?        – 3
4. ப்ரஹ்மஸூத்ரங்களின் எண்ணிக்கை விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின்படி எத்தனை?            – 3
5. அதிகரணம் என்றால் என்ன? ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தப்படி ப்ரஹ்மஸூத்ரத்தில் எத்தனை அதிகர ணங்கள் அமைந்துள்ளன?                – 3
6. ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தப்படி ஜகத்காரணன் யார்? – 3
7. பூர்வமீமாம்ஸா சாஸ்த்ரம் எத்தனை அத்தியாயங்கள் கொண்டது? அதை இயற்றியவர் யார்? அவருக்கும் வேத வியாஸருக்கும் அமைந்துள்ள தொடர்பு யாது?     – 3
8. உத்தர மீமாம்ஸா சாஸ்த்ரம் என்றால் எதைக் குறிக்கும்? அதை இயற்றியவர் யார்?                – 3
9. ‘பலாத்யாயம்’ என்று குறிப்பிடுவது சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் எத்னையாவது அத்தியாயம்?        – 3
10. ஸ்ரீபாஷ்யத்திற்கு அமைந்துள்ள தனித்தன்மை யாது?                         – 3
11. பேதச்ருதி, கடகச்ருதி, அபேதச்ருதி என்றால் என்ன பொருள்?                        – 3
12. வேதாந்த வாக்கியங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயரை எழுதுக?            – 3
13. ஸித்தத்விகம், ஸாத்யத்விகம் என்றால் எந்தெந்த அத்யாயங்கள் குறிப்பிடுகின்றன?            – 3
14. ஸமந்வயாத்யாயம், அவிரோத்யாயம், ஸாதநாத்யாயம் ஆகியவை ப்ரஹ்ம ஸூத்ரத்தின் எந்தந்த அத்தியாயங்களைக் குறிக்கும். அதற்கான காரணங்கள் யாவை?        – 3
15. ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எத்தனை பாதங்கள் அமைந்துள்ளன?            – 3
16. முதல், இரண்டு, மூன்று, நான்கு அத்தியாயங்களில் அமைந்தள்ள அதிகரணங்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.        – 5
17. அவ்வாறே முதல், இரண்டு, மூன்று, நான்கு அத்தியாயங்களில் அமைந்தள்ள ஸூத்ரங்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.                – 5
18. ‘சதுஸூத்ரி’ என்று அழைக்கப்படும் முதல் நான்கு ஸூத்ரங்கள் யாவை?                    – 3
19. முதல் அத்தியாயம் இரண்டாம் பாதம் எதைத் தெரிவிக்கின்றது?                    – 3
20. ப்ரஹ்மஸூத்ரத்தின் முதல் மற்றும் இறதியான ஸூத்ரங்களை எழுதிடுக?                – 3
21. “பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி” இது எந்த உபநிஷத்தில் அமைந்துள்ள வாக்கியம்?                – 3
22. ஜந்மாத்யதிகரணத்தில் (1-1-2) பூர்வபக்ஷிகளின் மூன்று பக்ஷங்கள் குறிப்பிடப்படுகின்றன அவை யாவை?    – 5
23. ‘சாஸ்த்ர யோநித்வாத்’ என்னும் ஸூத்ரத்தில் (1-1-3) ‘யதோவா இமாநி’ என்று தொடங்கும் தைத்திரீய உபநிஷத்து வாக்கியத்தின் பொருள் எவ்வாறு விளக்கப்படுகிறது. பூர்வபக்ஷியின் ஆக்ஷேபத்திற்கு எவ்வாறு பதில் உரைக்கப் படுகிறது?                        – 5
24. 1-1-18 ஸூத்ரத்தின் திரண்ட பொருள் என்ன?    – 5
25. வேதாந்தஸாரத்தில் பொருள் விவரிக்கப்படும் ஐந்து வெவ்வேறு உபநிஷத்து வாக்யங்களை எடுத்து எழுதவும்?                        – 5
26. பூர்வபக்ஷி தன் கொள்கைக்கு சாதகமாக குறிப்பிடும் மூன்று வேதவாக்யங்களை எடுத்து எழுதவும்?        – 3
27. த்ரமிடாசாரியர் அருளிச் செய்த எந்த விளக்கத்தை எந்த ஸூத்ரத்தில் பாஷ்யகாரர் விவரித்துள்ளார்?        – 3
28. 1-1-29 ஸூத்ரத்தில் ஒரு உபநிஷத்திலிருந்து கதை ஒன்று மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது? அதை விவரித்திடுக.                        – 5
29. த்வஷ்டாவின் குமாரனுக்கு எத்தனை தலைகள் இருந்ததாக கூறப்படுகிறது?                    – 3
30. முதல் அத்தியாயம் முதல் பாதத்தில் அமைந்துள்ள அதிகரணங்களை வரிசைப்படுத்திக?            – 5
31. வேதாந்தஸாரத்தில் குறிப்பிடப்படும் ஐந்து ரிஷிகளின் பெயரைக் குறிப்பிடுக.                – 5
32. ஸாங்க்ய மதத்தை பரப்பியவர் யார்?        – 3
33. வேதத்தின் பொருளை விளக்க வந்த மற்றைய சாஸ்திரங்கள் யாவை?                        – 3
34. யோகசாஸ்திரத்தை பரப்பியவர் யார்? அதை வைதிகர்கள் பிரமாணமாக கொண்டுள்ளார்களா?            – 3
35. கணாத, அக்ஷபாத, க்ஷபணக ஆகிய ஸ்மிருதிகளை வைதிகர்கள் பிரமாணமாகக் கொண்டுள்ளார்களா?    – 3
36. ‘ப்ரஹ்மத்திற்கு விசித்திர சக்தி உண்டு’ என்பதை எவ்வாறு நாம் அறிய முடியும்?                    – 3
37. கனவில் நாம் காணும் பொருள்களையும் மனிதர்களையும் யார் படைக்கிறார்கள்?                    – 3
38. ‘அஸமஞ்ஜஸம்’ என்றால் என்ன பொருள்?    – 3
39. ‘ஸமவாயம்’ என்ற ஸம்பந்தத்தை யார் முன் வைக்கிறார்கள்?                    – 3
40. பௌத்தர்களின் மதக் கொள்கை எவ்வாறு வேதாந்தஸாரத்தில் தள்ளப் படுகிறது?        – 6
41. இறந்த உடலை விட்டு நீங்கிய ஆத்மா கர்மங்கள் கழிந்தவாறே எவ்வாறு மாதாவின் கருப்பையை அடைகிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?             – 5
42. 3-2-26 ஸூத்ரத்தில் பிரஹ்மமே பிரபஞ்சமாக ஆகிறது என்பதை எவ்வாறு உதாஹரணம் காட்டி நிரூபித்துள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்?                     – 10
43. ‘தஹரவித்யை’, எந்த உபநிஷத்தில் கூறப்பட்டள்ளது? ‘அபஹதபாப்மா’ என்ற சொல்லிற்கு என்ன பொருள்?- 3
44. ‘பிராணவித்யை’, எந்தெந்த உபநிஷத்துகளில் விவரிக்கப் பட்டுள்ளன?                        – 3
45. ‘சாண்டில்யவித்யை’, எந்த உபநிஷத்தில் விவரிக்கப் பட்டுள்ளது?                        – 3
46. ‘புருஷ வித்யை’, எந்தெந்த உபநிஷத்துகளில் விவரிக்கப் பட்டுள்ளது?                        – 3
47. ‘உத்கீதவித்யை’ எந்த உபநிஷத்தில் குறிப்பிடப்படுகிறது?                 – 3
48. யாகத்தில் இரண்டு வகைகள் உண்டு அவை யாவை?                         – 3
49. ‘அக்நி பரிசர்யையை விட்டவன் ஸந்ததியை கொன்றவன் ஆவான்’ என்பது யாருடைய கொள்கை?        – 3
50. பரமாத்மாவை எந்த கதியில் சென்று அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?                 – 3
குறிப்பு: எந்த ஆசார்யனிடம் ஸமாச்ரயணம் செய்து கொண்டார் என்பதையும், அந்த ஆசார்யனின் தனியனையும் எழுதுபவருக்கே கூடுதல் பத்து மதிப்பெண் அளிக்கப்படும்.
***

Sri Ramanusar 1000 Book


Sri Ramanusar 1000 Book release function Invitation


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு.
ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – வரலாறு – அவர் அருளிச் செய்த நூல்கள், அவருடைய பெருமைகளை பறைசாற்றும் துதிநூல்கள், இராமாநுசருடைய சமுதாயச் சிந்தனைகள், கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், அர்ச்சையில் அவருக்கு நடைபெறும் வைபவங்கள், அவர் அருளிச்செய்த வேதாந்த ஸாரம் என்னும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக (உணஞிதூஞிடூணிணீச்ஞுஞீடிச்), இந்த நூலின் முதல் மூன்று பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு குடைக்கீழ் அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசர் அருளிச்செய்த வேதாந்த ஸாரத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசருடைய மற்றைய க்ரந்தங்களான வேதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், கத்யத்ரயம், நித்யம் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு, இன்னும் சில வரலாற்று நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள், பல திவ்யதேசங்களில் இராமாநுசருடைய அர்ச்சா திருமேனிக்கு அளிக்கப்பட்டு வரும் மரியாதைகள், இராமானுசரின் சீரிய மேலாண்மைக் கொள்கைகள், ராமாநுஜ ஸம்பிரதாயம் தமிழ் நாடு தவிர்ந்த மற்றைய தென் வடமாநிலங்களில் நிலை கொண்ட விதம் ஆகியவை இடம் பெற உள்ளன.
நந்தன ஆண்டு சித்திரை மாதம் 13ஆம் நாள் புதன் கிழமை (25.4.2012) ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூலின் முதல் மூன்று பாகங்கள் வெளியிடப்பட உள்ளன. ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி, யதிராஜஜீயர் ஸ்வாமி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி 23 வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆகியோர்கள் எழுந்தருளி விழாவினைச் சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிநிரல்
இடம்: ஸ்ரீ யதிராஜ ஜீயர் மடம் – ஸந்நிதி தெரு – ஸ்ரீபெரும்புதூர்
நேரம்: மாலை 4.00 மணி
வரவேற்புரை: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர்
(1) நூலை வெளியீடு மற்றும் மங்களாசாஸனம் வழங்குதல் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி.
(2) நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொள்வோர்: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி, யதிராஜ ஜீயர் ஸ்வாமி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி 23 வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
(3) இந்த நூல் வெளியீட்டிற்கு நிதியுதவி புரிந்த புரவலர்கள் A.N.S. Jewelry Sri.A.S. ராஜேந்திரன், Sri.A.S.  ஸ்ரீராம் ஆகியோருக்கு
ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி எம்பார் ஜீயர் ஸ்வாமி திருக்கரங்களால் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுதல்.
ரூபாய் 800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இராமாநுசர் ஆயிரம் முதல் மூன்று பாகங்கள் A.N.S.Jewelry  உரிமையாளர்கள் கைங்கர்ய ஸ்ரீமான்கள்.Sri.A.S. ராஜேந்திரன், Sri.A.S.  ஸ்ரீராம் மற்றும் மேல்நாடு வாழ் அன்பர்களின் நிதியுதவி கொண்டு ரூபாய் 300 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய் 500க்கு விற்பனைக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மூன்று பாகங்களின் அடிப்படையில் பரிசுப் போட்டி ஒன்றும் நடைபெற உள்ளது. இந்த மூன்று பாகங்களுக்கான கேள்வித் தாள் ஒன்று இந்த நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான விடையை 1.7.2012க்குள் எமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசு ஒன்று கீண்.3000, இரண்டாம் பரிசு இரண்டு, ஒவ்வொரு வருக்கும் கீண்.2000, மூன்று மூன்றாம் பரிசுகள் ஒவ்வொரு வருக்கும் கீண்.1000. மொத்தத்தில் கீண். 10,000 பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
இந்த நூலின் 1800 பக்கங்களில் அமைந்துள்ள மணிப்ரவாளச் சொற்களுக்கு மட்டும் ஓர் ‘அரும்பொருள் சொல் அகராதி’ உருவாக்கப்பட உள்ளது. பாமரனின் பார்வையில் எந்தெந்தச் சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லையோ, அவற்றை இந்த நூலைப் படிப்போர் ஒருமாத கால அவகாசத்திற்குள் எமது அலுவலகத்திற்கு எழுதி அனுப்பினால் நந்தன வருஷம் ஆனி திருவாதிரை தொடங்கி இந்த மூன்று பாகங்களுக்கான அருஞ்சொற் பொருள் அகராதி விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மூன்று பாகங்களின் அடிப்படையில் பல்வேறு வயதுவரம்பிற்குட்பட்டவர்கள் இடையே பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியனவும் விரைவில் நடைபெற உள்ளன. ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ.திரிதண்டி ஸ்ரீமந் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமியின் ஆசியுடன்,  தேர்ச்சிப் பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கரும்பு தின்னக் கூலி போல் அமைந்துள்ள இந்த விற்பனைச் சலுகையினை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளன. சலுகைவிலையில் இராமானுசர் 1000 மூன்று பாகங்கள் 31.5.2012 வரையில் தான் விற்பனைக்கு அளிக்கப்படும் அந்தத் தேதிக்குள் மூன்று பாகங்களை வாங்குபவர்கள் மட்டுமே பரிசுப் போட்டியில் பங்கு கொள்ள இயலும்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவானமாமலை ஜீயர் மடத்தில் உள்ள எமது விற்பனை நிலையத்தில் ரூபாய் 500 செலுத்தி 25.4.2012ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்துகொள்வோர்க்கே ரூபாய் 800 விலைநிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பாகங்களும் ரூபாய் 500க்கு 27.4.2012 வரை கிடைக்கும். அத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ள கேள்வித்தாளை பரிசுப்போட்டியில் கலந்து கொள்ள எண்ணம் கொண்டோர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நூலின் பிரதிகளை 27.4.2012 தேதிக்குப் பிறகு, 214 கீழை உத்தர வீதி திருவரங்கம் திருச்சி – 6 என்ற முகவரியில் 31.05.2012 வரை ரூபாய் 600 செலுத்தி
(நூலின் சலுகை விலை 500 + 100 கூரியர் சார்ஜ்) பெற்றுக் கொள்ளலாம். சென்னை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயில் இந்தப் புத்தகம் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்காது.
இந்த நூல் வெளியீட்டிற்கு அனைத்து இராமாநுசன் அடியார்களும் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்திட வேண்டுகிறேன்.***

KO 7 release


ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)
7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா
சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.
நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.
இடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம்.

வெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்: ஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.
முதல்பிரதியைப்பெற்றுக் கொள்பவர்: கைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.

பாராட்டுரை வழங்குபவர்கள்: 1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’, ‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார் அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்,-எழுத்தாளர்,  3) தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம்,

List of some Good English Books on Sri Ramanuja & Sri Vaishnavism


List of Sri /Shree Vaishnava Sampradaya Books
Available from Sri Vaishnava Sri,Srirangam.
0431 2434398 , 90424 53934
admin@srivaishnavasri.com,
reachsrivaishnavasri@gmail.com

Life of Ramanujacharya – Alkondavilli Govindacharya – 150

2.Sri Ramanuja’s Life and Teachings – C.R.Srinivasa Aiyengar – 180

3.Sri.Ramanuja’s philosophy & Religion – P.B.Vidyarthi – Rs.250/-

4.Sri Bhashya of Ramanuja – II – R.D.Karmarkar – Rs 200/-

5.Holy Lives of the Azhvars  –  Alkondavilli Govindacharya – Rs.150/-

6.Philosophy of  the Vedanta sutra – S.M.S.Chari – Rs.120/-

7.Impact of Sri Ramanujacharya on temple worship – Sarojini Jagannathan – Rs.150/-

8.History of Vaishnavism in South India upto Ramanuja’s period – Rs.200/-

9.Bhagavad Gita – The Hindu Philosophy of Conduct – M.Rangacharya,M.B.Varadaraja Iyengar & M.R.Sampatkumaran – Rs.220/-

10.Ramanuja’s Vedartha Samgraha – J.A.B. Van Buitenen – Rs.150/-

11.Advaita & Visishtadvaita  –  S.M.S.Chari – Rs.120/-

12.The Philosophy of Sri Ramanuja – Srisaila Chakravarthi Acharya – Rs.160/-

13.Ramanuja Sampradayam in Gujarat – Haripriya Rangarajan – Rs.120/-

14.Sri Bhashya on the philosophy of the Brahmasutra – S.S.Raghavachar – Rs.150/-

15.Acharya Hrdayam – A critical study – G.Damodaran – Rs.80/-

16.Complete works of Dr.K.C.Varadachari Vol VI – Rs.250/-

17.Bhagavad Gita – III
The Hindu Philosophy of Conduct – M.Rangacharya ,M.B.Varadarajan & M.R.Sampatkumaran – Rs.170/-

18.Biography of Sri Varavaramuni – Gwalior Sathyamurthy Iyengar – Rs.40/-

19.Sri Vachana Bhushanam – Gwalior Sathyamurthy Iyengar – Rs.70/-

20.Mumukshappadi & Thathvathrayam – Gwalior Sathyamurthy Iyengar – Rs.80/-

21.Vedanta Desika Dhivya charitram – Dhvitheeya Brahmathanthra swamy – Rs.70/-

22.Vedanta Deepam – Bhashyam – Rs.120/-


Perumal Koyil Ozhugu – PKO Book Release


 

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பெருமாள் கோயிலொழுகு’ நூல் வெளியீடு
(காஞ்சிபுரம் தேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு)
19-12-2010 ஞாயிற்றுக்கிழமை, இடம்-ஸ்ரீ நம்பிள்ளை ஸந்நிதி,
பேயாழ்வார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி.
ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும் மங்களாசாஸனம் செய்யப் பெற்றதும், புராணங்களால் கொண்டாடப் படுவதுமான காஞ்சிபுரம் ஸ்ரீதேவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு, புராணங்கள், கல்வெட்டுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 870 பக்கங்கள் கொண்ட (2 பாகங்கள்) ‘பெருமாள் கோயிலொழுகு’ என்னும் நூல் 19-12-2010, ‘ஆழிமழைக்கண்ணா’ அன்று, திருவல்லிக்கேணி, பேயாழ்வார் கோயில் தெரு, ஸ்ரீநம்பிள்ளை ஸந்நிதியில் காலை 11 மணியளவில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
இந்த நூலின் விலை ரூ. 600/- வெளியீட்டு தினத்தன்று சலுகை விலையில் ரூ. 500க்கு அளிக்கப்பட உள்ளது. நூலினை வேண்டுவோர்

Copies can be had from

Sri Vaishnava Sri
214,East Uthara  Street , Srirangam,Trichy-620006.

Phone-0091 -431 2434398 , 0 98842 89887 , 90424 53934

SRI VAISHNAVA SRI

36/32. NAICKAMAR STREET,
WEST MAMBALAM,CHENNAI-33
Ph. 044-24715120/09941793151

 

Gangadeviyin Mathura Vijayam


Sri.Venugopalan’s Preface to Mathura Vijayam

திரு. அ.கிருஷ்ணமாசார்யரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது எப்படி? அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மூலம் தான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். பின்னர் திருவரங்கம் சென்றபோது அவரை நேரில் சந்தித்தேன். என்ன ஆச்சரியம். என்னைப் பார்த்ததும் ‘புஷ்பாதங்கதுரை நீங்கள்தானே’ என்று கேட்டார். வெகு சுவாரஸ்யமாகப் பேசினார். அவர் சொந்த வரலாற்றையும் சிறிது அறிந்து கொண்டேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். ஸ்ரீவைஷ்ண வத்திற்குத் தொண்டாற்றவேண்டும் என்னும் உறுதியுடன் விச்வரூபம் எடுத்துவிட்டார். நான் எழுதிய ‘திருவரங்கன்உலா’தான் என்னை ஏற்கெனவே அவரிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. முதல் சந்திப்பில் தொடங்கிய எங்கள் நட்பு பின்வந்த ஆண்டுகளில் நீடித்துக் கொண்டே வந்தது.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயப் புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு அவர் பணி முடிவுறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்; வைணவத்தில் தொலைதூரக்கல்வி நடத்துகிறார் என்பது என்னைப் பெரிதும் கவர்ந்தது. “கோயிலொழுகு” புத்தகம் எனக்குக் கிடைத்த விதத்தை நான் திருவரங்கன் உலாவில் குறிப்பிட்டிருக்கிறேன். பின்னர் இந்தப் புத்தகத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் திரு. கிருஷ்ணமாசார்யர் என்ன செய்தார்? அசுர வேகத்தில் இறங்கி கோயிலொழுகின் அத்தனை விஷயங்களையும் திரட்டி அதிசயம்! அற்புதம்! என்று சொல்லும் அளவுக்கு வெளியீடு செய்துள்ளார். கோயிலொழுகைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தகுந்த தலைப்புகள் கொடுத்து அழகிய தமிழில் எளிய நடையில் எழுதியிருக்கிறார் இவர். இப்படிக் கொண்டு வருவதன் கஷ்டங்களை முழுவதுமாக உணர்ந்தவன் நான்.
அத்துடன் அவர் விடவில்லை. கல்வெட்டுகளில் காணப்படும் திருவரங்கன் கோயில் தொடர்பான அத்தனை செய்திகளையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார். ஆர்க்கியலாஜிகல் வெளியீடுகளைத் தேர்ந்தெடுத்து விளக்கமளித்துள்ளார். பழங்காலம் பற்றிய உதிரியாகக் கிடைத்த சில விளக்கங்களைக் கண்டு, விவரித்துள்ளார். இந்த விஷயத்தில் இனி சொல்வதற்கோ, செய்வதற்கோ வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதுகாறும் 16 அழகிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் காணப்படும் விஷயங்களைக் கொண்டு ஒளி ஒலி நிகழ்ச்சி யாகக் கோயிலுக்கு வரும் யாத்திரிகர்களுக்குக் காட்டி பார்ப்பவரை பழமையில் உலாவ விடலாம்! தேவஸ்தானமும் அரசாங்கமும் இந்தச் செயலில் இறங்க வேண்டும்.
இன்னொரு விஷயம்: கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் என்பதை விரிவாக எழுதி ராணியையும் அவரது கண வரையும் தம் மானசீகக் கண்களில் வசீகரமாக வரும்படி எழுதி யுள்ளார். இதற்கு உதவிய டாக்டர் திருவேங்கடாசாரி அவர்களையும் நன்றியுடன் நினைக்கிறார். காவிரி நதி பாய்ந்தோடுமாப் போலே, யானை முகப்புப் பட்டயம் அணிந்து கம்பீரமாக புறப்பட்டு வருமாப்போலே இந்த வடமொழிக் காவியத்தை மொழி பெயர்த்தும், அவ்வளவு அழகாகவும், கம்பீர நடையிலும் படிப்பவர்க்குச் சட்டெனப் புரியும்படியும் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு அருமையும் பெருமையும் வாய்ந்தவர் இவர். இவரது சீரிய செயல்களை ஸ்ரீவைஷ்ணவ உலகம் நன்றாக ஏற்றுக் கொண்டு விட்டது. இவரது அழகு மிளிரும் இந்தப் புத்தகங்களை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ண வனும் நிச்சயம் படித்து உணர்ந்து கொள்வான் என்று நம்புகிறேன். இந்த அடியவனுக்கு இவர் எழுதிய இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதக் கொடுத்து வைத்தது பெரும் பாக்கியமே! இதனால் திருவரங்கன் மகிமையை மீண்டும் ஒரு பெரிய சுற்று அனுபவிக்கும்படி வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாம் திருவரங்கன் செயல்!                                                                       ***