The Need of the Hour – A Hindu Vote Bank


இந்து ஓட்டு வங்கி
ஏன்? எதற்கு? எப்படி?
இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று  வாக்களிக்கின்ற தன்மை இயல்பாகவே இவர்களிடம் உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும், ஒட்டு  மொத்த சிறுபான்மை இனத்தவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கின்றனர்.
பெரும்பான்மை இந்து மக்களாகிய நாம் ஜாதி, சினிமா கவர்ச்சி, அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் பிரிந்து நின்றும், இலவசத் திட்டங்களில் மயங்கியும் வாக்களிக் கின்றோம். தற்போது இந்துக்களின் ஓட்டை விலை கொடுத்து வாங்கிட முடியும் என்கிற நிலைமையும் உள்ளது. இதன் காரணமாக எந்தவொரு அரசியல் கட்சியும், அரசாங்கமும் இந்துக்களின் நலன் குறித்துக் கவலைப்படு வதில்லை. இந்துக்களின் முன்னேற்றத்திற்காக எந்தவொரு செயலையும் செய்வதில்லை. ஏன்? இந்து என்று சொல்லிக் கொள்ளவே தயங்கும் சூழ்நிலை உள்ளது. தற்போது மதச்சார்பற்ற தன்மை என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இந்துக்களுக்கு விரோத மாக செயல்படுவது என்றாகிவிட்டது.
இந்நிலையில் இந்துக்கள் ஒன்றுபட்டு ஹிந்து தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் வாக்களிக்க வேண்டிய கட்டாய நிலை தோன்றியுள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாக தமிழகம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த இந்து ஓட்டு வங்கியை இந்து சமுதாய நலன் கருதி துவங்கியுள்ளோம். இது இந்து மக்கள் கட்சிக்கான அல்லது பாரதீய ஜனதா கட்சிக்கான ஓட்டு வங்கி அல்ல. இந்து மக்கள் கட்சி இந்த ஓட்டு வங்கியைத் துவங்கியிருந்தாலும் இந்து சமுதாயத்தின் நலன் பெரிதா? கட்சி நலன் பெரிதா? என்று வரும்போது நாங்கள் இந்து சமுதாய நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்கிற உறுதியை உங்களுக்குத் தருகிறோம்.
தமிழகத்தில் இந்துக்களின் ஜனத்தொகை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் கலாசாரம் பண்பாடு ஆகியவை அழிந்து வருகிறது.
இந்துக் கோயில்களின் நிர்வாகம் அரசு மற்றும் அரசியல்வாதி களின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. திருக்கோயில் வருமானத்தை மட்டும் அரசு அபகரித்துக் கொள்கிறது.
இஸ்லாமிய பயங்கர வாதம், கிறிஸ்தவ மோசடி மத மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழக இந்துக்கள் அஞ்சி வாழும் சூழ்நிலை.
தமிழர்கள் கல்வி நிறுவனங்கள் துவங்கி நடத்துவதற்கு அரசு மூலம் பல்வேறு தடைகள். இஸ்லாமியர், கிறிஸ்துவர் கல்வி நிறுவனங்கள் துவக்கினால் அரசு சலுகைகள். கல்வி உதவித் தொகை வழங்குவதில்கூட இந்து  மாணவர்களுக்கு அநீதி.
பொது இடங்களில் இந்துக் கோயில் ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்குப் பல்வேறு விதமான தடைகள், இந்து இயக்கங்களின்மீது அடக்குமுறை நடவடிக்கைகள்.
இந்து துறவிகள், மடாதிபதிகள் மற்றும் இந்து சமய நம்பிக்கை களை இழித்தும், பழித்தும் அவமதித்தும் நாள்தோறும் செய்திகள்.
தமிழர்கள் தெய்வமாக வணங்கும் பசுமாட்டை வெட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவல நிலை.
அரசு மதுபானக் கடைகளின் வியாபாரப் பெருக்கம் காரணமாகக் குடிப்பழக்கத்தினால் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து வரும் சூழ்நிலை.
இலங்கை, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்துத் தமிழர்கள் அடித்துத் விரட்டியடிக்கப்படும் அவலநிலை.
இந்த இழிவுநிலை மாறிட! இந்துக்களின் உரிமையை மீட்டிட! தாய்நாடு, தாய்மதம், தாய்மொழி காத்திட! இந்து ஓட்டு வங்கியில் நம்மையும் நம் குடும்பத்தாரையும் பதிவு செய்து கொள்வோம்.
நமது ஓட்டை அரசியல்வாதிகள் கொடுக்கும் நோட்டுக்கு விற்பது பெற்ற தாயை விற்பதற்குச் சமமாகும்.
ஜனநாயக நாட்டின் மிக வலிமையான ஆயுதம் ‘ஓட்டு’. அந்த ஓட்டைக் கையில் வைத்துள்ள நாம் தேச பக்தியோடும், தெய்வ பக்தி யோடும் இந்து ஓட்டு வங்கியில் பதிவு செய்து நாட்டு நலன் காத்திடு வோம்.

இந்து ஓட்டு வங்கி விண்ணப்பப் படிவம்.
பெயர் :

வயது :

முகவரி :

(:
மின் அஞ்சல் :

தொழில் :

வாக்கு எண்:             வார்டு:

சட்ட மன்றத் தொகுதி:

நாடாளு மன்றத் தொகுதி:

உறுதி மொழி:

மேற்கண்ட நான் எனது குல தெய்வத்தின்பேரிலும், இஷ்ட தெய்வத்தின் பேரிலும் சத்யம் செய்து ரூபாய் 10 மட்டும் காணிக்கை யாய்க் கொடுத்து எனது ஓட்டை இந்த வாக்கு வங்கியில் பதிவு செய்கிறேன். நாட்டு நலனின் அடிப்படையில் வாக்கு வங்கியின் நிர்வாகிகள் கொடுக்கும் குறிப்பின்படி நான் வாக்களிப்பேன்.

வாக்காளர் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  வெள்ளைத் தாளில் எழுதி எங்களுக்கு தபால் / அல்லது நேரில் ஒப்டைக்கலாம்.

திரு. அர்ஜுன் சம்பத்,

நிறுவனர், இந்து ஓட்டு வங்கி,
தலைவர், இந்து மக்கள் கட்சி,
130, வீர கணேச நகர்,
கெம்பட்டி காலனி,
கோயம்புத்தூர்-641 001.

தொலைபேசி : 0422-2394877. தொலைநகல் : 0422-2349922
கைப்பேசி : 098422-44833, 094421-54833.

imkarjunsampath@yahoo.co.in
imk hindu.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: