Krishnadevaraya & Srirangam part 2 of 3


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாறும்,  அவருடைய
திருவரங்கம் கோயிலைச் சார்ந்த அறப்பணிகளும்”-மூன்று பகுதிகளில் 2ஆம் பகுதி.
25. தாதாசாரியர் என்பவர் கிருஷ்ணதேவராயரின் ஸ்ரீவைஷ் ணவ குருவாவார்.
26. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர், இருசமய விளக்கம் இயற்றிய அரிதாசர், திருவாரூர்த் தத்துவப் பிரகாசர் முதலிய தமிழ்ப் புலவர் களையும் இவ்வரசர் ஆதரித்து வந்தார்.
27. கிருஷ்ண தேவராயர், நாடகம், சித்திரம், சிற்பம், சங்கீதம் முதலிய பிற கலைகளையும்  வளர்த்தார்.
28. தென்னகக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்து மானியங்கள் அளித்தார்.
29. கலைகளுக்கு உறைவிடமாகவும் திருமகள் நடமிடும் தெய்வீக அழகுடனும் திகழ்ந்த விஜய நகர சாம்ராஜ்ய வைபவங்களைப் பற்றி மேனாட்டறிஞர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
30. சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ஆட்சியின் மாட்சியை வருணிக்க இயலாது.
31. ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்  ‘மதாலச சரித்ர‘ ‘சத்யாவதூ பரிணயம்‘ ‘சகலகதா சாரசங்கிரகம்‘ ‘ஞான சிந்தாமணி‘ ‘ரசமஞ்சரி‘ முதலிய ஸம்ஸ்கிருத நூல்களை இயற்றியுள்ள தாக ஆமுக்த மால்யதவில் குறிப் பிட்டுள்ளார்.
32. திரு.எம்.கிருஷ்ணமாசாரியர் தமது வடமொழி இலக்கிய வரலாற்று நூலில் கிருஷ்ண தேவராயர் ‘உஷா பரிணயம்‘ என்னும் வடமொழி நாட கத்தை இயற்றினார் என்றும் அதன் பிரதி ஆந்திராவிலுள்ள வனபர்த்தி சமஸ்தான ஏட்டுச் சுவடிகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்நூல் இன்றுவரை கிடைக்க வில்லை.
33. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் இயற்றிய ‘ஜாம்பவதி பரிணயம்‘ என்னும் நாடகம் தற்போது கிடைத்துள்ளது.
34. ‘ஆந்திரபோஜன்’ ‘சகலகலா போஜன்’ ‘சாஹித்ய சமராஸ்கானசார்வ பௌமன்’ ‘மூருராயர கண்டன் ராஜாதிராஜன்’ ‘ராஜாதிராஜன்’ என்றெல்லாம் விருதுகள் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் பெருமைக்குச் சான்றாக விளங்குவது அவர் இயற்றிய “ஆமுக்தமால்யத” எனும் காவியமே.
35. ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் 1515-16ஆம் ஆண்டில் விஜய வாடாவிற்கு அருகிலுள்ள ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு தேவாலயத்திற்குச் சென்று ஆமுக்த மால்யத காவியத்தை இயற்றத் தொடங்கி 1520இல் அதனை முடித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
36. பேரரசர் அவரது  இறுதி நாட்களில் மகன் மரணம், மந்திரிகள்மீது ஐயம், முகம்மதிய  மன்னன் அடில்கான் படையெடுப்பு முதலியவற்றால் நிம்மதியை இழந்திருந்தார்.
37.  இவர் எழுதிய ஞானசிந்தாமணி என்னும் நூல் திருவரங்கத்தில் பெரிய பெருமாள் திருமுன்பு தினந்தோறும் படிப்பதற்காக நிவந்தங்கள் விடப்பட்டிருந்தன.
38. பெரியபெருமாள் திருமுன்பு ஒரு நூல் படிக்கப்பட வேண்டுமானால் அது ஓர் உயர்ந்த வேதாந்த  பரமான நூலாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே கிருஷ்ணதேவராயர் மிகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய நூல் ஒன்றினையும் இயற்றியுள்ளார் என்பதும் பெறப்படுகிறது. கல்வெட்டு எண். அ.கீ.Nணி. 295/1950-51)
39. தற்போது இந்த ஞானசிந்தாமணி என்ற நூலின் ஒரு பிரதிகூட கிடைக்கவில்லை.
40. கிருஷ்ண தேவராயரின் விஷ்ணு பக்தியும், திருப்பதிப் பெருமாளிடத்தில் அவர் கொண்ட ஈடுபாட்டையும் அனைவரும் அறிவர்.
41. தமது ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர் திருப்பதிக்கு விஜயம் செய்தார். பல விலையுயர்ந்த அணிகலன்களை அவர் பெருமாளுக்கு அர்ப்பணித்ததோடு, பல திருவிழாக்களுக்கு நன் கொடைகள் வழங்கினார்.
42. விசிஷ்டாத்வைதத்தைப் பக்தியுடன் பின்பற்றி வந்த கிருஷ்ணதேவராயர் அதன் தத்துவங்கள், சித்தாந்தங்கள், இலக்கியங்கள், மரபுகள் அனைத்தையும் நன்கு அறிந்திருந்தார்.
43. திவ்யப் பிரபந்த பாசுரங்கள், ஆழ்வார்களின் சரிதைகள் , ஆந்திர பூரணரின் யதிராஜ வைபவம் கருடவாஹன பண்டிதரின் திவ்யசூரி -சரிதம். அனந்தாச்சார்யரின் பிரபந்நாம்ருதம், மணிப் பிரவாள நடையில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் இயற்றிய ஆறாயிரப்படி குருபரம்பரா பிரபாவம் போன்ற பல நூல்களை நன்கு கற்றிருந்த அவரால் கோதாதேவியையும், விஷ்ணு சித்தரையும் குறித்த வரலாற்றுக் கவிதை நூலை எளிதாக எழுத முடிந்தது.                                        (தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: